Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் முழுவதும் பாயும் பண வெள்ளம் …புது டெக்னிக்கில் விநியோகம் செய்யும் வேட்பாளர்கள் !!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியினர் கச்சிதமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையைப் பார்த்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரக்கோணம் தொகுதிகளுக்குள்  அடங்கிய ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் என மூன்று தொகுகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் புது டெக்னிக்கல்லை பயன்படுத்தி பண விநியோகம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

cash distribution to voters in vellore
Author
Vellore, First Published Apr 8, 2019, 9:03 PM IST

பணப்பட்டுவாடா விவகாரத்தில் காட்பாடி ஜாம்பவானே மாட்டிக்கொண்டு முழிக்கும்போது, அதே  தொகுதியில் போட்டியிடும் இன்னொரு முக்கிய வேட்பாளரோ, அனைத்துப் படைகளின் கண்ணையும் கட்டிவிட்டு ’கவனிப்புகளை’ கச்சிதமாய் செய்து முடித்துவிட்டார் என கூறப்படுகிறது.

cash distribution to voters in vellore

அவர் தனது கல்லூரி மாணவர்களின் நம்பிக்கையான சிலரைத் தேர்வு செய்து தேர்தல் சர்வே என்ற பெயரில் களத்தில் இறக்கிவிட்டு அவர்கள் மூலமாகவே கொடுக்க வேண்டியதையும் கொடுத்து முடித்துவிட்டாராம்  ஏ.சி.சண்முகம்.

cash distribution to voters in vellore

அதே போல் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் என மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து அதிமுக செயல்பட்டு வருகிறது.

cash distribution to voters in vellore

சோளிங்கர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜி. சம்பத், திமுக சார்பில் அ. அசோகன், அமமுக சார்பில் டி.ஜி.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியாக இருக்கும் சோளிங்கரில் அதிமுகவுக்காக முதலமைச்சரும் , திமுகவுக்காக ஸ்டாலினும் பிரசாரம் செய்து முடித்துவிட்ட நிலையில் தேர்தல் பரப்புரை உச்ச கட்டத்தில் இருக்கிறது.

cash distribution to voters in vellore

மக்களவைத் தொகுதிகளை விட சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அதிமுக, பண விநியோகத்தில் கவனத்தை செலுத்தி வருகிறது. அதன்படி சோளிங்கர் நகரில் இருக்கும் நான்கு பெட்ரோல் பங்க்குகளில் இருந்து சட்டமன்றத் தொகுதியில் விநியோகிப்பதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பணம் இன்று காலை முதல் சப்ளை ஆகிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

cash distribution to voters in vellore

பெட்ரோல் பங்க்குகளில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கே பணத்தை ஸ்டாக் வைத்து அங்கிருந்து சுற்று வட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது என்பதுதான் அதிமுகவின் திட்டம். அதன்படியே சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பெட்ரோல் பங்க்கில் இருந்து விநியோகம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் பங்க் களை பணம் சேமிக்கும் இடமாக அதிமுக பயன்படுத்தி வருவதாக தகவல்கள் 

Follow Us:
Download App:
  • android
  • ios