Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மனு மீதான விசாரணை வேறு தேதிக்கு மாற்றம்.. சைடுகேப்பில் அதிரடி முடிவு எடுத்த இபிஎஸ்.!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்தலாம்.  விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கியது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. 

Case on OPS petition.. hearing changed to another date
Author
Delhi, First Published Jul 28, 2022, 1:58 PM IST

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இபிஎஸ்ஐ தொடர்ந்து அக்கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்தலாம்.  விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கியது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Case on OPS petition.. hearing changed to another date

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில் இன்று விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Case on OPS petition.. hearing changed to another date

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக கேவியட் மனு தொடரப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில், அதிமுக தலைமை கழகம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios