இ-பாஸ் இல்லாமல் வெளியூர் செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலேசானை கூட்டத்திற்கு பின்னர், சென்னை சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சென்னையிலிருந்து இ-பாஸ் பெறாமல் பலர் சொந்த ஊருக்கு செல்ல படையெடுக்க தொடங்கினர். இதனையடுத்து செங்கல்பட்டு டோலில் வாகன பரிசோதனை கடுமையாக்கப்பட்டு, இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.