சேலம் பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்து, தாக்குதலுக்கு உள்ளான சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பொருளாதார மந்த நிலை குறித்து விவாதிக்க சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்குச் சென்று ஃபேஸ்புக்கில் லைவ் அடித்த பியூஸ் மானுஷ், தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மானுஷ், ’’பாஜகவினரை நான் தாக்கவில்லை. அதற்கு ஆதாரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடராமல், தாக்குதலுக்கு உள்ளான என் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்’’ என அவர் குற்றம்சாட்டினார்.