Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி வேலுமணி அவரது சகோததர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு. அமைச்சராக இருந்தபோது கோடிகணக்கில் ஊழல்.??

2014- 2018ல் சென்னை மாநகராட்சியில் 460,4.02 கோடி ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு எஸ்.பி வேலுமணி அவர் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவருக்கு வழங்கியதாக அவர் மீது புகார் இருந்துவரும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

Case against 17 persons including  SP Velumani and his brothers. Corruption in crores when he was a minister. ??
Author
Chennai, First Published Aug 10, 2021, 9:29 AM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் இது தொடர்புடைய 10 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அந்த அதிரடி நடவடிக்கை அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 திமுகவின் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் மீது கொடுத்த ஊழல் புகாரில் நீதிமன்ற உத்தரவின்படி முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், அண்மையில் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டு களுக்கும் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்ததால் எஸ். பி வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014- 2018ல் சென்னை மாநகராட்சியில் 460,4.02 கோடி ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு எஸ்.பி வேலுமணி அவர் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவருக்கு வழங்கியதாக அவர் மீது புகார் இருந்துவரும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி வேலுமணி மீதான புகாரில் கேசிபி என்ஜினீயர் உள்ளிட்ட 10 நிறுவனங்கள்  மீது வழக்கு புதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணியின் சென்னை எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள அவரது அறையில், மற்றும் அவரசு வீடு அலுவலகம் என கோவையில் மொத்தல் 32 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக 10 நிறுவனங்கள், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி. வேலுமணி சகோதரர் அன்பரசன், சந்திரசேகரன், ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சென்னையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள வேலுமணியின் உறவினர் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான ஒரு இடத்திலும், சென்னையில் 15 இடத்திலும், கோவையில் 35 இடத்திலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு வேலைகள் வழங்குவது தொடர்பாகவும் ஒப்பந்த அடிப்படையில்  பலரிடம் லஞ்சம் பெற்றதாகவும் அடுத்தடுத்து வந்த புகாரின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios