நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி,  நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம். முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரவும் நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என எதற்குமே வராமல்  அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி தொண்டர்களுக்காக அவ்வப்போது டுவிட்டரில் வெளியிட்டு  வெளியிட்டு வருகிறார். ஆனால் தொண்டர்கள் சந்தோஷப்பட்டாலும் ஒரு பக்கம் விஜயகாந்த்தின் இந்த வீடியோவை பார்த்து கண்கலங்குகின்றனர்.

சின்ன குழந்தைக்கு நாம் சொல்லிக் கொடுத்தால் அது எப்படி ஒப்பிக்குமோ அதேபோல கேப்டனும் சொல்கிறார்.  எப்படி இருந்த மனுஷன் இவரு? தமிழ் சினிமாவில் தீ மாதிரி இருந்த கேப்டனா இவரு? சட்டசபையில் பெண்சிங்கம் எனப் போற்றப்படும் ஜெயலலிதாவையே கம்பீரமாக எதிர்த்துப் பேசிய எதிர் கட்சித் தலைவராக இருந்தவரா இவரு? விஜயகாந்த்தைப் பார்த்த குஷியில் இருக்கும் அதே தொண்டர்கள் விஜயகாந்த் குழந்தைபோல பேசும் இந்த  நிலையைப் பார்த்து சொல்லமுடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தொண்டர்கள் என்னதான் சோகத்தில் இருந்தாலும், இந்த உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்து செய்தி சொல்லும் விஜயகாந்த்தின் குழந்தை மனசு யாருக்கு வரும்? ரியல் கேப்டனுக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.

"