Asianet News TamilAsianet News Tamil

சித்த மருத்துவ சேவையை மூலதனமாக்குகிறாரா? சினிமா ஹீரோவாக பரபரக்கும் வீரபாபு..!

ரஜினியின் தீவிர ரசிகரான வீரபாபு சென்ன்னையில் சில இடங்களில் உழைப்பாளி உணவகத்தை ஆரம்பித்து ரூ.10க்கு உணவு வழங்கி வந்தார். 

Capitalizing paranoid medical service? Veerababu is exciting as a cinema hero
Author
Tamil Nadu, First Published Apr 28, 2021, 6:25 PM IST

கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் வீரபாபுவுவின் சேவை தமிழக மக்களால் மெச்சப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தியதாக போற்றப்பட்டார். பின்னர் அந்த சேவையில் இருந்து விலகிக் கொண்டார்.  மீண்டும் தற்போது கொரோனா அதிகரித்து இருப்பதால் தமிழக அரசு தனக்கு அழைப்பு விடுத்து இருப்பதாகவும் உளைப்பாளி மருத்துவமனையை ஆரம்பித்துள்ளதால் யோசித்து சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

 Capitalizing paranoid medical service? Veerababu is exciting as a cinema hero

ரஜினியின் தீவிர ரசிகரான வீரபாபு சென்னையில் சில இடங்களில் உழைப்பாளி உணவகத்தை ஆரம்பித்து ரூ.10க்கு உணவு வழங்கி வந்தார். இதனால், பலரது கவனத்தையும் ஈர்த்தார்.  அடுத்து கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் சிகிச்சை அளித்து பெரும் புகழ் பெற்றார். அடுத்து அந்த சேவையில் இருந்து தன்னைன் விடுவித்துக் கொண்டார். அவரது சிகிச்சையால் பலரும் பலன் பெற்றாலும், வீரபாபு சிலரிடம் அதிகமாக நன்கொடை வசூலித்ததாக புகார்கள்ன் எழுந்தன.  Capitalizing paranoid medical service? Veerababu is exciting as a cinema hero

இதனை அடுத்து அவர் ரூ.10 ரூபாய்க்கு உணவுவழங்கிய உழைப்பாளி உணவகத்தை மூடி விட்டார். தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு எதிரில் உழைப்பாளி மருத்துவமனையை தொடங்கி மிகக் குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறார்.  அவர் மீது வைத்துள்ள நற்பெயர் காரணமாக பலரும் சிகிச்சைக்கு நாடி வருகின்றனர். ஆனால், ஆரம்பத்தில் சேவை மனப்பாண்மையில் மருத்துவம் வழங்கி வந்த வீரபாபு, கட்டண நோக்கத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

அதாவது ஏழை எளிய மக்கள் தன்னை நாடிப் வந்தால் தற்போது, அவர்களிடம் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. அரசு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து லட்சங்களின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், பொருளாதார அளவில் தன்னை மேம்படுத்திக் கொண்டுவிட்ட வீரபாபு, மேலும் புகழ்பெரும் நோக்கத்தில் தனது தயாரிப்பில் தானே ஹீரோவாக நடிக்க இயக்குநரை தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநாடு பட ஷூட்டிங்கில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பாக கொரோனா மருந்துகளை வழங்கி வந்தார் வீரபாபு.

  Capitalizing paranoid medical service? Veerababu is exciting as a cinema hero

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்த மருத்துவர் வீரபாகுவிடம் விளக்கம் கேட்க பல வகைகளில் முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. இதுகுறித்து அவர் தனது தரப்பு விளக்கத்தை கூறினால் வெளியிடவும் தயாராக இருக்கிறோம். 

Follow Us:
Download App:
  • android
  • ios