கோவையில் நடந்தது சிலிண்டர் விபத்து என்று இனியும் ஏமாற்ற முடியாது… அண்ணாமலை ஆவேசம்!!
கோவையில் நடந்தது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்றும் அது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்தது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்றும் அது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் நடந்தது தற்கொலைப் படை தாக்குதலுக்கான முயற்சி என்று கடந்த இரண்டு வாரங்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சி சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளது தேசிய புலனாய்வு முகமையின் இன்றைய பத்திரிகையாளர் செய்தி. திறனற்ற திமுக அரசு கோவையில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை சிலிண்டர் விபத்து என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. தேசிய புலனாய்வு முகமை நடந்த சம்பவத்தை "குண்டு வெடிப்பு" வழக்கு என்று அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற சோதனையின் போது பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர், முதல்வர்..! வரவேற்று வைக்கப்பட்ட கொடிகள்.. போலீசார் அகற்றியதால் பரபரப்பு
மேலும், இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்புடைய 6 பேரை கைது செய்து பின் தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஜமேஷா முபீன், 'பயாத்' எடுத்த பிறகு, அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு உறுதி எடுத்தபிறகு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைக்குரிய அடையாளங்களையும், புராதன சின்னங்களையும் சேதப்படுத்தி அழிக்க தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்களை அச்சுறுத்தவும் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. இன்று தேசிய புலனாய்வு முகமை சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டது.
இதையும் படிங்க: தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரளா.! கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- இறங்கி அடிக்கும் சீமான்
இன்று நடைபெற்ற சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் குற்றவியல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் வேரூன்றி விட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உயிரிழந்த ஜமேஷா முபீன் உடன் இணைந்து பெரும் பயங்கரவாத செயலை நிகழ்த்திட சதித்திட்டம் தீட்டி, மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (Improvised Explosive Devices) அடங்கிய வாகனம் உட்பட, பல்வேறு வேதிப்பொருட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை உருவாக்கத் தேவையான பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் வாங்கியுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவின் செயலற்ற தன்மையால் நிகழவிருந்த பெரும் உயிர் சேதத்திலிருந்து நம்மை இறைவன் தான் காப்பாற்றினார் என்று தெரிவித்துள்ளார்.