Asianet News TamilAsianet News Tamil

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை தடை செய்ய வேண்டும் என கூற முடியுமா? ஆளுநருக்கு பாலகிருஷ்ணன் கேள்வி!!

பாஜகவுக்கு துணை போகிற கட்சியாக அதிமுக செயல்படுவதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

can you say that rss should be banned balakrishnan questions the governor
Author
Tamilnadu, First Published May 16, 2022, 6:02 PM IST

பாஜகவுக்கு துணை போகிற கட்சியாக அதிமுக செயல்படுவதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சி.பி.எம் கட்சியியின் மண்டல பேரவைக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், நூல் விலையேற்றத்தினை கண்டித்து தொழிலாளர்கள், முதலாளிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளது. நூல் விலையேற்றமானது கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் பதுக்கலில் ஈடுபடுவதால் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தமிழகத்தில் பருத்தி கழகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அதன் மூலமாக சிறுவியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாமல் உள்ள மத்திய பருத்தி கழகத்தினை செயல்படுத்தவும் வேண்டும்.

can you say that rss should be banned balakrishnan questions the governor

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் சி.பி.எம் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவிக்கும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தினை தடை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் அவ்வாறு கூற கூடாது எனவும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய வேண்டும் என கூறும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினை தடை செய்ய வேண்டும் என கூற முடியுமா? பெரும்பாலான நீதிமன்றங்கள், ஆட்சியர் அலுவலகங்கள் நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் செயல்படும்போது எந்த தார்மீக அடிப்படையில் நீர் நிலைகளில் உள்ள வீடுகளை இடிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை எனவும் பயன்படாத நீர் நிலைகளில் உள்ள வீடிகளை இடிக்க கூடாது எனவும் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவிற்கு சொந்த கொள்கை இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

can you say that rss should be banned balakrishnan questions the governor

முழுக்க முழுக்க பாஜக என்ன சொல்கிறதோ அதனை செய்கிற துணை போகிற கட்சியாக செயல்படுகிறது. பாஜக மத்திய அரசின் கோட்பாடுகளை தூக்கி பிடிக்க தூக்கி பிடிக்க வருங்காலத்தில் அரசியலில் அதிமுக கொள்கைகள் இன்றி காணமல் போக கூடிய சூழல் ஏற்படுமெனவும் பெட்ரோல்,டீசல், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அதிமுக இதுவரை பேசவில்லை என்றும் தமிழகத்தில் பசு பாதுகாப்பு மடங்கள் அமைக்க வேண்டிய தேவை என்பது தற்போது இல்லை. அதில் சி பி எம்மிற்கு உடன்பாடு இல்லை எனவும் திராவிட மாடல் என திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு சோசியலிச மாடல் என்பது தான் கோட்பாடு திமுகவினர் அவர்கள் நிலைபாட்டில் உள்ளது போல் சி பி சோசியலிஷ கோட்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios