Asianet News TamilAsianet News Tamil

என்னை கைது செய்தால் அமைச்சர்கள் தப்பிவிட முடியுமா..? ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி சவால்..!

"சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது; என்னை கைது செய்வதால் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி ஊழல் செய்து வரும் அதிமுக அமைச்சர்கள் தப்பிவிட முடியாது" என ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

Can the ministers escape if they arrest me? RS Bharathi challenge on bail
Author
Tamil Nadu, First Published May 23, 2020, 11:22 AM IST

"சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது; என்னை கைது செய்வதால் கொரோனா தொற்றைப் பயன்படுத்தி ஊழல் செய்து வரும் அதிமுக அமைச்சர்கள் தப்பிவிட முடியாது" என ஜாமீனில் வெளிவந்த ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் இன்று அதிகாலை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு எழும்பூர் நீதிமன்றம், இடைக்கால ஜாமீன் வழங்கியது. பட்டியலின மக்கள் குறித்து அன்பகத்தில் பேசிய அவரது உரையில், தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்களில் அதிக ஒதுக்கீடு செய்ததற்கு காரணம் திமுகதான். கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட பிச்சை என கூறியிருந்தார்.Can the ministers escape if they arrest me? RS Bharathi challenge on bail

இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், கடந்த  மார்ச் மாதம் காவல்துறையில் புகார் அளித்தார்.  அதனடிப்படையில்  சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.Can the ministers escape if they arrest me? RS Bharathi challenge on bail

 போலீசார் அழைத்துச் செல்லும் போது நிருபர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பிப்ரவரி 15ஆம் தேதி நான் பேசிய பேச்சு சமூக ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. அதற்காக இப்போது வந்து கைது செய்வது உள்நோக்கமுடையது. கொரோனா உபகரணம் நான் சமீபத்தில் கொரோனா உபகரணம் வாங்கியது தொடர்பாக ஊழல் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தேன். இதற்கான ஆதாரங்களை திரட்டினேன். இதற்காகத்தான் நான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என்னை கைது செய்துள்ளார்கள். தனிமை சீப்பை ஒழித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்த முடியாது. கொரோனா ஊழலுக்கு எதிராக புகார் அளிக்கப்படும். நான் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டிருந்தேன். இந்த சூழ்நிலையில் என்னைக் கைது செய்துள்ளனர். எனத் தெரிவித்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios