Can get a hat?

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? அல்லது விசில் சின்னம் கிடைக்குமா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வென்ற சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பாக அதன் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம் சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான பிரசாரமும் நடைபெற்றது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா போன்றவைகளால் தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் ஒருங்கிணைந்த அணியினருக்கு அதிமுக கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும், ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஏற்கனவே டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டிருந்த நிலையில், இந்த முறையும் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் வேறு 3 நபர்களும், தோப்பி சின்னத்தை கேட்டுள்ளனர். இதையடுத்து, விதிகளுக்கு உட்பட்டு சின்னம் வழங்கப்படும என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்ற நிலை நீடித்து வருகிறது.

தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா என்பது குறித்து அவரின் ஆதரவாளர்கள் கூறும்போது, கடந்த முறை தொப்பி சின்னத்தில் அவர் பிரசாரம் செய்தார். கண்டிப்பாக அந்த சின்னம் எங்களுக்கே கிடைக்கும். அப்படி தொப்பி சின்னம் கிடைக்கவில்லை என்றால் விசில் சின்னம் கிடைக்கும் என்கின்றன