சசிகலா இன்று விடுதலையானதைத் தொடர்ந்து  விருதுநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ராமர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு பாலபிஷேகம் செய்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த ஜெயலிதாவின் தோழி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்ப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் 3ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கடந்த நான்கு ஆண்டுகள் அவர்  தண்டனை அனுபவித்துள்ளார். இதுவரை இரண்டு முறை அவர் பரோலில் வெளி வந்தார். அவர் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை  அவர் ஏற்கனவே செலுத்திவிட்டார்.

  

இதனைத் தொடர்ந்து இன்று சிறை அதிகாரிகள் விடுதலைக்கான ஆவணங்களை சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை காண காவல் நிலையத்தில் வழங்கினர். இந்நிலையில் இன்று காலை ஆவணங்களை சரி பார்த்த போலீசார் அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சசிகலாவிடம் வழங்கினார். அதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர்  பூரணமாக குணமடைந்து உள்ள நிலையில் அவர் ஒரு வார காலம் ஓய்வு எடுத்து பின்னர் அடுத்த மாதம் 3ஆம் தேதி சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் விடுதலையானதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்துள்ளனர். 

விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று திருமதி சசிகலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். அதனைக்  கொண்டாடும் விதமாக  விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து  நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ராமர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு பாலபிஷேகம் செய்தனர் இதில் விருதுநகர் அம்மா மக்கள் முன்னேற்றம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.