மாற்று கட்சியிலிருந்து விலகிய 10,000 பேர் – ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணையும் விழா

கோவை மாவட்டம் காரமடையில், மாற்று கட்சியிலிருந்து விலகிய 10 ஆயிரம் பேர் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.

இதற்காக 9 ஏக்கர் நிலப்பரப்பு தூய்மைபடுத்தப்பட்டு, 25 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தலும், தி.மு.க. தலைவரின் வயதை குறிக்கும் வகையில் 93 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழச்சியில் கலந்து கொள்வதற்காக ததிமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை செல்கிறார்.

கோவை செல்லும் அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் நாளை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைவோரை வரவேற்று பேச உள்ளார். 
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் , முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், நகரச் செயலாளர் முகமது யூனுஸ், புருஷோத்தமன் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.