Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ஒரே நேரத்தில் 10 லட்சம் வழக்குகள் ரத்து.. சரித்திர முதல்வர் பழனிசாமியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

CAA protest,curfew violation cases cancels...edappadi palanisamy Announcement
Author
Tirunelveli, First Published Feb 19, 2021, 12:02 PM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது,  முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. 1500 வழக்குகள் பதிவான நிலையில் சில வழக்குகளை தவிர அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 

CAA protest,curfew violation cases cancels...edappadi palanisamy Announcement

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன.  முகக்கவசம் அணியாதது, ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றியது, இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட விதிமீறல்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன.

CAA protest,curfew violation cases cancels...edappadi palanisamy Announcement

மேலும், கூகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios