திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக மண்ணைக் கவ்வும் என்றும், அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெற்றிபெறும் முனைப்பில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக ஈடுபட்டு வருகிறது.  சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பிறகு, திருவாரூர் தொகுதியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியிலும்  வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தினகரன் தரப்பு முனைந்துள்ளது.

 

தற்போதிலிருந்தே தினகரன் தரப்பினர் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக, இவ்விரு தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரனிடம் வெற்றியை பறிகொடுத்து விட்டு இருக்கும் அதிமுக, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

இந்த நிலையில் உணவு துறை அமைச்சர் காமராஜ், இடைத்தேர்தல்களில் திமுக மண்ணைக் கவ்வும் என்றும், அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்களத்தில் அமைச்சர் காமராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுபேசிய அவர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். மேலும், இவ்விரு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலின் போது திமுக மண்ணைக் கவ்வும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதியாக தெரிவித்தார்.