காலியாக இருந்த நான்கு தொகுதிகளுக்காக நடத்தப்படும் இடைத்தேர்தலுக்கு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. 

நாடாளுமன்ட்த் தேர்தலுக்குப் பின் மீதமிருந்த  சூலூர்,அரவக்குறிச்சி,ஓட்டப்பிடாரம்,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலானது நடைபெறுகிறது. இதற்கான வாக்கு பதிவு வரும் 19-தேதி நடை பெறுவதால் கடந்த 20-நாட்கள் இத்தொதிகளில் தேர்தல் பிரசாரம் சூடி பிடித்தது. 

அரசியல் தலைவர்கள் முதல் அந்தந்தக் கட்சியைச் சேர்ந்த அடிமட்ட நிர்வாகிகள் வரை, இந்த நான்கு தொகுதிக்கு பொறுப்பாளர்களை நியமித்தனர். அதுபோக வெளியூரில் இருந்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் தங்கி பிரச்சாரத்தை நடத்தி மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். 

தேர்தல் ஆணையம் கொடுத்த பிரச்சார நாட்களானது இன்றுடன் முடிவதால் வெளியூர் கட்சி நிர்வாகிகள் தாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி கொண்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.