Asianet News TamilAsianet News Tamil

4 தொகுதிகளில் தொடங்கியது இடைத் தேர்தல் …. உற்சாகமான வாக்குப் பதிவு !!

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் தொகுதிகளில் காலை சரியாக 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

by elction commenced in 4 constitutency
Author
Madurai, First Published May 19, 2019, 7:02 AM IST

தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று   நடைபெறுகிறது. இதேபோன்று 13 வாக்குச்சாவடிகளில் காலை 7 முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

by elction commenced in 4 constitutency

இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம்  நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இந்த 4 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மட்டும் 15 ஆயிரத்து 939 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூலூரில் 324 வாக்குச்சாவடிகளும், அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 297 வாக்குச்சாவடிகளும், ஓட்டப்பிடாரத்தில் 257 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

by elction commenced in 4 constitutency

இந்த நான்கு தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 131 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இதே போல் மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருவள்ளூர் மேட்டுப்பாளையத்தில் ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூரில் திருவதிகை, ஈரோட்டில் திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தேனியில் பாலசமுத்திரம், வடுகபட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

by elction commenced in 4 constitutency

நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறு வாக்குப்பதிவு ஆகியவற்றில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios