bus port will build on salem said chief minister palanisamy
ஏர்போர்ட் போல சேலம், மதுரை, கோவையில் பஸ்போர்ட் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலைக்கு செல்லும் வழியில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது, ஏர்போர்ட் போல சேலம், மதுரை, கோவையில் பஸ்போர்ட் அமைக்கப்படும். முதலில் சேலத்தில் பிரமாண்டமான பேருந்துநிலையம் அமைக்கப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கிவிட்டார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் சேலத்தில் விமான நிலையம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.
