budget debate in assembly

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதன் முறையாக கடந்த 16ம் தேதி தொடங்கியது. அதேபோல், அமைச்சர் ஜெயகுமார் நிதியமைச்சராக முதல் முறையாக பதவியேற்று பட்ஜெட் உரை வாசித்தார்.

3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று மீண்டும் பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குகிறது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும்.

அதில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கிறார்.

இதைதொடர்ந்து பட்ஜெட் குறித்த பொது விவாசதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும். வரும் 23ம் தேதி 2017–2018ம் ஆண்டுக்கான செலவு முன்பண மானிய கோரிக்கைகள் அவையில் வைக்கப்படும்.

அதேநேரத்தில், 2016–2017ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டும் அவையில் ஒப்படைக்கப்படும். அந்த துணை பட்ஜெட்டில் உள்ள துணை மானிய கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.

செலவு முன்பண மானிய கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்க சட்ட முன்வடிவவு அறிமுகம் செய்யப்படும். அதன்பின், தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு, 24ம் தேதி, நிதி அமைச்சர் ஜெயகுமார் பதில் உரையாற்றுவார். பின்னர், சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்