பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் MLAவும், குமாரசாமியின் அமைச்சரவையில் தொடக்கக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் என். மகேஷ் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.

முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் என்.மகேஷ், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மஜதவுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சருக்கான இடங்களில் ஒன்று பகுஜன்சமாஜ் கட்சிக்கும் வழங்கப்பட்டது. அதன் விளைவாக, என்.மகேஷ் அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அமைச்சர்  என். மகேஷ் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.

தனது சொந்த பிரச்சனை காரணமாக பதவியை ராஜினமா என்.மகேஷ், வரும் இடைத் தேர்தலில் குமாரசாமியின் கட்சிக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.