Asianet News TamilAsianet News Tamil

Breaking news: அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு.. பட்ஜெட் கூட்டத்தில் அமளி.. பரபரப்பு.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு இடையிலும், நிதி அமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 

Breaking news: AIADMK members walk out of the assembly.
Author
Chennai, First Published Aug 13, 2021, 10:16 AM IST

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு இடையிலும், நிதி அமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுகஅரசு இருந்து வருகிறது. 

Breaking news: AIADMK members walk out of the assembly.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.அதே நேரத்தில் கடுமையாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை பிடிஆர் தாக்கல் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிவோம். 

இந்நிலையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. சரியாக காலை 10 மணிக்கு வாசிக்க தொடங்கிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு இடையிலும், நிதி அமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

Breaking news: AIADMK members walk out of the assembly.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஊழலில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை பெற்று தரப்படும் என ஸ்டாலின் கூறியிருந்ததை அடுத்து தற்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந் நிலையில் இது அதிமுக- திமுக இடையே மிகப் பெரும் மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios