கூட்டணியில் 9.1 சதவீத இடத்தில் கடந்த உள்ளாட்சியில் நின்றோம். எங்களது பொது எதிரி திமுகதான். அதிமுக ஏற்கனவே பட்டியலை தயாராக வைத்திருந்ததால் நல்ல நாளான நேற்று பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிமுக பட்டியல் வெளியாவதை நாங்களும் ஆமோதித்தோம். தமிழக அரசியலை Gentle man ஆக நடத்தும் தலைவர்களாக ஒபிஎஸ் இபிஎஸ் உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை அதிமுகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்றும் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் gentleman என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான நல்லுறவு தொடரும் , அதிமுக மீது சிறு வருத்தமும் கிடையாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :-
ஓபிஎஸ் , எடப்பாடி இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர். காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டத் திருத்தம் , வேளாண் சட்டம் வரை பாஜகவிற்கு துணையாக இருந்தனர்" தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து , அகில இந்திய தலைவர்களும் ஏற்ற பிறகே அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.தமிழகம் முழுவதும் வேட்பாளர் நிறுத்தப்படுகின்றனர்.

அதே நேரம் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும்..இன்னும் சற்று நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறோம். அடுத்த 15,20 நாட்கள். தீவிரமாக பணி செய்ய உள்ளோம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் குரலுக்கு செவி சாய்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிமுகவுடனான நல்லுறவு தொடரும். நகர்ப்புற உள்ளாட்சியில் 10 சதவீதம் இடங்களை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக தயாராக இருந்தது.பல நேரங்களில் தலைவர்கள் சொல்லும் கருத்து முரணாவது இயல்புதான், அதிமுக குறித்த நயினார் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் உட்பட அனைவரும் வருத்தம் தெரிவித்தோம். அதிமுக உட்பட அனைவரும் அதை மறந்து விட்டோம். அதிமுக மீது எங்களுக்கு சிறு வருத்தமும் இல்லை. ஓபிஎஸ் , ஈபிஎஸ்
இக்கட்டான தருணத்திலும் திறமையாக கட்சி நடத்துகின்றனர். பாஜகவின் இல்லம் தோறும் தாமரை நோக்கத்திலேயே தனித்து போட்டியிடும் முடிவு எடுத்திருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறி, செய்யாத விசயங்களை பிரசாரத்தில் வீடு வீடாக எடுத்து செல்வோம். பாஜகவை தேவையில்லாமல் மதவாத கட்சி என்கிறார் முதல்வர். முதலமைச்சருக்கு ஆட்சியில் ஒத்துழைப்பு தருவோம். அதே நேரம் திமுகவின் அரசியல் பாணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கூட்டணியில் 9.1 சதவீத இடத்தில் கடந்த உள்ளாட்சியில் நின்றோம். எங்களது பொது எதிரி திமுகதான். அதிமுக ஏற்கனவே பட்டியலை தயாராக வைத்திருந்ததால் நல்ல நாளான நேற்று பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதிமுக பட்டியல் வெளியாவதை நாங்களும் ஆமோதித்தோம். தமிழக அரசியலை Gentle man ஆக நடத்தும் தலைவர்களாக ஒபிஎஸ் இபிஎஸ் உள்ளனர்.

2011 ல் தனித்து போட்டியிட்டு பல இடங்களில் வென்றோம். 11 ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்ளாட்சியில் தனித்து களம் காணுகிறோம். பாஜக காந்தியை பெரியளவில் கொண்டாடும், மானசீகமாக ஏற்று அவரது பாதையில் பயணிக்கும் கட்சிதான் பாஜக. நாங்கள் கோட்சேயின் வாரிசு கட்சி என முதல்வர் கூறுவது தவறு. 2024 ல் மோடி 400 இடங்களை பெறுவார். கேரளாவில் தடுப்பூசி திட்டத்தில் கூட முதலமைச்சர், பிரதமர் படத்தை பயன்படுத்து கின்றனர். அரசியல் முதிர்ச்சி பெற்ற மாநிலம் கேரளா. தமிழகம் அப்படி இல்லை. மோடி படம் பல திட்டங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. பாஜக வேட்பாளர் பட்டியலில் கடை நிலையில் இருக்கும் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.
