சங்கரன்கோவில் அருகே பிறந்த 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெற்ற தாயே எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம். சங்கரன்கோவிலில் கோமதி சங்க திரையரங்க வாளகத்தில் ஒரு பச்சிளங் குழந்தை எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சங்கரன்கோவில் நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 60% நிலையில் எரிந்து கிடந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதன் அருகே இரத்தக் கரை படிந்த துணிகளும் இரண்டு புதிய துணிகளும் எரிந்த நிலையில் கிடந்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

22 வயதான கோமதிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. தவறான தொடர்பு காரணமாக கர்ப்பமான கோமதி கருவை கலைக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குழந்தை பிறந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் பச்சிளம் குழந்தையை கொலை செய்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த சம்பவம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் சங்குபுரம் 6 வது பகுதியை சேர்ந்த 22 வயது கோமதி, கோமதியின் தாயார் இந்திராணி, மற்றும் அவரது தந்தை சண்முகவேல் ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொன்றது தெரியவந்துள்ளது. பின்னர் கோமதியை கைது காவல்துறையினர் கைது செய்தனர்.