மர்ம கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்  இந்நிலையில் அவரின்  திரைப்படத்தை புறக்கணிக்க கோரி  ட்விட்டரில் வலதுசாரிகள் ட்ரெண்டாக்கி  வருகின்றனர் .  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக   நுழைந்த முகமூடி அணிந்த வன்முறைக் கும்பல் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை பல்வேறு அரசியல் கட்சியனர் மற்றும் இயக்கத்தினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ,  அதில் மாணவர்களுக்கு ஆதரவாக  அவர் பேசியுள்ளார்.  அதற்கான  காணொளி சமூகவலைதளத்தில் வெளியாகி பாஜகவினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியது ,  அப் போராட்டத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் ,  ஜெய்பீம் ஆகிய முழக்கங்களும் விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க  என்ற முழக்கங்களும்  எழுப்பப்பட்டன மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகாபடுகோன் சென்றது பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 

இந்நிலையில்  தீபிகா படுகோன் நடித்து வெளியாக உள்ள சபா திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தி அதை பாஜக , ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.சமீபத்தில் இந்திய குடியுரிமை சட்டத்தை  நடிகர்கள் மத்தியில் விளக்கி கூறும் வகையில் கருத்தரங்கு ஒன்றை  ஏற்பாடு செய்த பாஜக அதில் கலந்துகொள்ள வருமாறு   நடிகர்களுக்கு அழைப்பு விடுத்தது .  ஆனால் அதை பாலிவுட் நடிகர் நடிகைகள் புறக்கணித்த நிலையில் தீபிகா படுகோனே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது  பாஜகவையும் , பாஜகவின் தலைமைகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது  குறிப்பிடதக்கது.