Asianet News TamilAsianet News Tamil

டாப் கியரில் உயரும் பாஜகவின் செல்வாக்கு... இப்போதே தேர்தல் நடந்தால் 321 இடங்களை வெல்லலாம்: அதிர வைக்கும் சர்வே

 ‘’43 % பேர் தேசிய ஜனநாயக கூட்டனிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. 

BJPs influence rising in top gear ... could win 321 seats if elections are held now: shocking survey
Author
India, First Published Jan 22, 2021, 11:26 AM IST

பிரதமர் நரேந்திர மோடி கோவிட் -19 தொற்று நோயை நன்கு கையாண்டார் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அவரது மதிப்பு பல மடங்கு பெருகி உள்ளது. இப்போது இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படுமானால், பாரதீய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று ஜனவரி 2021 பதிப்பின் படி இந்தியா டுடே குழுமம்  நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. BJPs influence rising in top gear ... could win 321 seats if elections are held now: shocking survey

இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்களில் வெற்றிபெறக் கூடும் என்றும் அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. தேசத்தின் மனநிலை (Mood Of the Nation) என்ற தலைப்பில் நடத்திய அந்த ஆய்வில், ஜனவரி 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. 

அதன்படி, கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம் எப்படி? என்கிற கேள்விக்கு, 73% மக்கள் மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக வாக்களித்துள்ள்னர். கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, 70% மக்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை குறை சொல்லவில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு..? என்கிற கேள்விக்கு ‘85% மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு’’ என பதிவாகி இருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்துதலில் பிறநாடுகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்கிற கேள்விக்கு, ஆஸ்திரேலியா -94% பேர் நன்றாக செயல்பட்டது. ஜெர்மனி -88% நன்றாக செயல்பட்டது. இந்தியா -73% சிறப்பாக செயல்பட்டது என பதிலளித்துள்ளனர்

BJPs influence rising in top gear ... could win 321 seats if elections are held now: shocking survey

கொரோனாவுக்கான சிகிச்சை எங்கு தரமாக கிடைக்கிறது? என்பதற்கு, 61% பேர் அரசு மருத்துவமனை ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார்கள். கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பமா? என்கிற கேள்விக்கு, 76% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்கிற கேள்விக்கு, ‘’43 % பேர் தேசிய ஜனநாயக கூட்டனிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

 BJPs influence rising in top gear ... could win 321 seats if elections are held now: shocking survey

27% பேர் மட்டுமே யு.பி.ஏ. கூட்டணிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணி 93 இடங்கள் வெல்ல வாய்ப்பு இருக்கும் என அந்த சர்வே கூறுகிறது. 30% பேர் இதர மாநில கட்சிகளை தேர்வு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 44% பேர் நன்றாக உள்ளது என பதில் அளித்துள்ளனர். 30% பேர் மிகச்சிறப்பு என்றும் 17% பேர் சராசரியாக செயல்படுகிறார் எனவும் 6% பேர் மிக மோசம் என பதில் அளித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios