Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் தனித்து நின்றாலும் 9 தொகுதிகளில் பாஜக வெற்றி ... அதலபாதாளத்தில் திமுக..!

 பாஜக தனித்து நின்றாலும் இந்த ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்த சர்வே முடிவுகள் கூறுகின்றன. அதேவேளை திமுக தனித்து நின்றால் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாது என்பதும் தெரியவந்துள்ளது.
 

BJP wins in 9 constituencies in Puducherry alone ... DMK in the abyss
Author
Tamil Nadu, First Published Mar 8, 2021, 11:17 AM IST

பாஜகவின் விஸ்வரூபத்தால் தனது கோட்டையாக விளங்கிய கங்கிரஸின் நிலைமை பெரும் கலக்கத்தில் உள்ளது. அங்கு என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என சர்வே முடிவுகள் அடித்துக் கூறுகின்றன. BJP wins in 9 constituencies in Puducherry alone ... DMK in the abyss

மோடி வருகையையொட்டி பாஜக புதுச்சேரியில் எழுச்சி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் களம் காணும் என எதிர்பார்த்த நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரங்கசாமி கூட்டணிக்கு வராவிட்டாலும் பாஜகவும், அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும் என பெங்களூருவை சேர்ந்த ரெனைசென்ஸ் பவுண்டேசன் புதுச்சேரியில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் சர்வே எடுத்த முடிவுகளை அறிவித்துள்ளது.

BJP wins in 9 constituencies in Puducherry alone ... DMK in the abyss

அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக - அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என அந்த் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக மட்டும் தனியாக 9 தொகுதிகளில் வெல்லும்  என சர்வே முடிவுகள் கூறுகின்றன. அதன்படி காமராஜர் நகர்தொகுதி, எம்பலம் தொகுதி, முத்தையால் பேட்டை, காலாப்பேட்டை, நெடுங்காடு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, மாஹி ஆகிய தொகுதிகளில் பாஜக தனித்து நின்றாலும் இந்த ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்த சர்வே முடிவுகள் கூறுகின்றன.

 BJP wins in 9 constituencies in Puducherry alone ... DMK in the abyss

அதேவேளை திமுக தனித்து நின்றால் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாது என்பதும் தெரியவந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios