Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் கைப்பாவையாக செயல்படும் காவல்துறை.. வினோஜ் பி. செல்வத்திற்கு பாஜக துணை நிற்கும்.. அண்ணாமலை ஆவேசம்.!

இந்துமத கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து, எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக பேசுவதாகவும் மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதியப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது, அதற்கு தமிழக காவல்துறையும் துணை போகிறது. நடவடிக்கை எடுத்தால் வினோஜ்.பி.செல்வத்திற்கு பாஜக துணைநிற்கும்.

BJP will stand by VinojPSelvam... Annamalai
Author
Chennai, First Published Jan 29, 2022, 6:37 AM IST

எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக பேசுவதாகவும் மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதியப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக காவல்துறை தன்னுடைய பெருமையையும் கண்ணியத்தையும் துறந்து, திமுக கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு உதாரணமாக சமீபத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 130க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள், இடிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை மேற்கோள்காட்டி, சுதந்திரத்திற்கு முன்பு கூட இப்படி அடக்குமுறை நடந்ததில்லை, உள்ளாட்சியில் ஆவது நல்லாட்சி மலர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

BJP will stand by VinojPSelvam... Annamalai

அந்தப் பதிவில் எந்தவிதமான கண்ணியக் குறைவான வாசகங்களோ, மதக்கலவரம் தூண்டும் செய்திகளோ இல்லை. ஆக அவர்கள் செய்யும் தவறை பொது மக்கள் சுட்டிக் காட்டுவதை திமுக விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதைவிட வினோஜ் பி செல்வத்தின் ட்விட்டர் பதிவையும், வழக்குப்பதிவையும், மேற்கோள்காட்டி இதுபோல பதிவிடும் பொது மக்களை அரெஸ்ட் செய்வோம் என்று சென்னைப் பெரு நகர கால்துறை ஆணையர் கடிதம் வெளியிட்டுள்ளார். இது அச்சுறுத்தலா அல்லது அத்துமீறலா..?

BJP will stand by VinojPSelvam... Annamalai

ஒரு கருத்தியலை, கருத்தியலால் எதிர்கொள்ளாமல், தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, காவல்துறையை ஏவிவிட்டு, அண்ணல் அம்பேத்கரால் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்திற்கு, தடை போட நினைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்துமத கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து, எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக பேசுவதாகவும் மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதியப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது, அதற்கு தமிழக காவல்துறையும் துணை போகிறது. நடவடிக்கை எடுத்தால் வினோஜ்.பி.செல்வத்திற்கு பாஜக துணைநிற்கும்.

BJP will stand by VinojPSelvam... Annamalai

இடித்துரைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத மன்னன் விரைவில் கெட்டழிவான் "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்" என்ற வள்ளுவர் வாக்கை, உணர்ந்து விமர்சனங்களை, அரசு தன்னை செம்மைபடுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும். மாறாக, கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டால், அதைப் பார்த்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி அமைதியாக இருக்காது என்பதை கண்ணியமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios