Asianet News TamilAsianet News Tamil

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக ஜெயிக்காது.. அடித்து கூறும் ஸ்டாலின்..!

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். வீட்டிற்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் கிடைக்காததால் டி.வி. பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

BJP will not win a single seat in Tamil Nadu... MK Stalin election campaign
Author
Chennai, First Published Apr 4, 2021, 12:07 PM IST

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். வீட்டிற்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் கிடைக்காததால் டி.வி. பார்த்துவிட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற  உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து ஐஸ் அவுஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 

BJP will not win a single seat in Tamil Nadu... MK Stalin election campaign

அப்போது அவர் பேசுகையில்;- இப்போது நான் உதயநிதிக்காக ஓட்டுக்கேட்டு வந்தது, ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் போட்டியிட்டபோது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தது நினைவுக்கு வருகிறது. எனது மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிட்டார்கள். பின்பு வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

BJP will not win a single seat in Tamil Nadu... MK Stalin election campaign

அப்போது உங்களுக்கு இன்னும் அதிகமாக 25 சீட் கிடைக்கப்போகிறது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். திமுகவை அச்சுறுத்தவே ஐடி ரெய்டு செய்தார்கள். திமுகவை அச்சுறுத்த முடியாது. அதிமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி தருகிறார்கள். பாஜக மோடியின் மஸ்தான் வேலை திமுகவிடம் செல்லாது. அனைத்து பத்திரிகைகளிலும், திமுக மீது குற்றச்சாட்டு கூறி விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில் கூறியவைகள் உண்மை என்றால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அது தொடர்பாக வழக்கு போட்டிருக்கலாம், தண்டனை பெற்று தந்திருக்கலாம். ஆனால் வழக்கு போடவும் இல்லை, நிரூபிக்கப்படவும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios