திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ ஆக போகிறது என பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மக்கள் புகார்கள், தேவைகளை ஆராய்ந்து அறிக்கைகளை தயார் செய்ய அந்த குழு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக எல்.முருகன் கூறுகையில்;- திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப்பேரவை தேர்தலை போன்று வரும் தேர்தலிலும் ஜீரோவாகத்தான் இருக்கும். திமுக தலைவர், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிக்கை மட்டுமே விடுகின்றனர். ஊராட்சியில் தலித் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்? என காட்டமாக முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது, தாமரையும் மலராது என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.