தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜகவில் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் பாஜக வளரும் என தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஒரு நபரை சுற்றியோ ஒரு குடும்பத்தை சுற்றியோ நடக்கும் கட்சி பாஜக அல்ல. அதிமுகவுடன் இழுபறி எதுவும் கிடையாது. தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெறும். 

இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளதால்  ஜனநாயக ரீதியாக கருத்துக்களை சொல்பவர்களுக்கோ போராட்டம் நடத்துபவர்களுக்கோ எவ்வித சிக்கலும் கிடையாது. தேச ஒற்றுமைக்கு எதிராக கடிதம் எழுதவில்லை எனில் வழக்கு இருந்தால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம்’’என அவர் தெரிவித்தார்.