Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் நெருங்கும் இப்படியொரு சோதனையா..? பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த ஹேக்கர்கள்..!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. 

bjp website hacked by hackers
Author
Tamil Nadu, First Published Mar 5, 2019, 12:42 PM IST

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. bjp website hacked by hackers

தேசிய ஆளும் கட்சியான பாஜக தங்களது கொள்கைகளையும், கட்சியின் அறிவிப்புகள், நிர்வாகிகள் பற்றிய தகவல்களை www.bjp.org என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டு வந்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக பற்றிய சிறப்பு தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன. மக்களவை தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளது அக்கட்சியினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. bjp website hacked by hackers

இதனை செய்தது யார் என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதனை செய்ததாக ஏந்த ஹேக்கர் குழுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பாக பாஜக கட்சி சார்பிலும் இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.bjp website hacked by hackers

கடந்த ஆண்டு மே மாதம் அசாமில் உள்ள மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ பழைய இணையதளம் www.assam.bjp.org முழுமையாக ஆபாச விடியோ தளமாக மாற்றப்பட்டது. பின்னர் அந்த இணையதளத்தின் டொமைன் காலாவதியாகி விட்டதால் அதனை அமெரிக்க நிறுவனம் வாங்கி நடத்தி வந்தது தெரிய வந்ததால் அந்தப்பக்கத்தை நீக்க பாஜக கோரிக்கை விடுத்தது.   

Follow Us:
Download App:
  • android
  • ios