கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் விசிக தலைவர் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் விசிக தலைவர் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அதி வேகம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரமும் முன் எடுக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் திருமாவளவன் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

நடிகர்விவேக்தடுப்பூசிபோட்டதற்குப்பின்னர்தான்அவர்சுயநினைவைஇழந்தார்என்றுமக்களைஅச்சப்படுத்திதடுப்பூசிசெலுத்திகொள்வதைதடுக்கமுயன்ற

@thirumaofficial அவர்களே, இன்றுநூறுகோடிதடுப்பூசியைசெலுத்தியுள்ளதுஇந்தியா.

நீங்கள்அன்றுசொன்னதற்குஇன்றுமன்னிப்புகேட்பீர்களா? என்று நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்.

Scroll to load tweet…