ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இவைதான் அம்மாநிலத்திலுள்ள பிரதான கட்சிகள். பிறர் 4 தொகுதிகளை வென்றனர். அதாவது பாஜக தன் வசமிருந்த 12 தொகுதிகளை இழந்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடந்த சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 

எனவே தற்போது ஒரு தொகுதியில் வென்றுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கடந்த தேர்தலை ஒப்பிட்டால் 11 தொகுதிகளை கூடுதலாக பெற்று 30 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட 10 தொகுதிகள் கூடுதலாக பெற்று 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தமுறை எதிர்க்கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே நேரம் தனது கூட்டணியில் இருந்த ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் (ஏஜேஎஸ்யூ) கட்சியை கூட தக்கவைக்க முடியாமல் பாஜக இழந்தது.

 

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றாலும்  பாஜக அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. பாஜக மட்டும் 33.5 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 35.35  சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன.  அதாவது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18.95% காங்கிரஸ் 13.8% ஜார்கண்ட் அனைத்து மாணவர் சங்கம் 7.9% ராஷ்டிரீய ஜனதாதளம் 2.8  என அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே 35.35 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளன. நோட்டா 1.4% இதர கட்சிகள் 11.7 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

 

ஆக மொத்தத்தில் ஆட்சியை பாஜக இழந்தாலும் தனித்து 33.5 சதவிகித வாக்குகளை பெற்றிருப்பது மிகப்பெரிய வாக்கு வங்கியாகப்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைத்ததால் அங்கு வெற்றி பெற்றுள்ளது.  ஒருவேளை அங்கு கூட்டணியில் கவனம் செலுத்தி இருந்தால் பாஜக ஆட்சியே அமைந்திருக்கும். பாஜக தோற்றாலும் ஜார்கண்டில் அந்தக் கட்சி வாக்குசதவிகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.