பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த தினம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் பாஜக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் அவரது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தையொட்டி பல வார கொண்டாட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் 

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு வேல்முருகன் அவர்கள் கலந்து கொள்ளும்  முப்பெரும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் நாளை( 29-10-2020) அன்று நடைபெற உள்ளது. மாநில அறிவுசார் பிரிவு தலைவர் திரு அர்ஜுன் மூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது. அதில் 700 பேருக்கு மோடி அவர்களின் மக்கள் நல உதவி திட்டங்களை தொடங்கி வைத்தல், மேலும் உலக அரங்கில் முதல் முறையாக தமிழகமெங்கும் சுமார் 70 ஆயிரம் பாஜக கொடி ஒளி திட்டம் துவக்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  அதாவது ( பாஜக கொடிக்கம்பத்தில் சோலார் மின்விளக்கு திட்டம்) அமைய உள்ளது. 

மேலும்  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு  தனிமனித திறனை மேம்படுத்துதல், ஊக்குவித்தல், வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவது என்ற முயற்சியின் தொடர்ச்சியாக" வாழ்வாதார அடை காப்பகம்" என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. பாஜக அறிவுசார் பிரிவு நடத்தும்போது இந்த மாபெரும் முப்பெரு விழாவில் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக பாஜக செய்தி வெளியிட்டுள்ளது.