சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆசை உள்ளதாகவும், கொடுத்தால் வெற்றிபெற்றுத் தருவேன், ஆனால் முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆசை உள்ளதாகவும், கொடுத்தால் வெற்றிபெற்றுத் தருவேன், ஆனால் முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போது கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்தும் அதிமுக-பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, அதிமுக தலைமையிடம் பாஜக போட்டியிட விரும்பும் 24 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, இதில் 20 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வெளியான அந்த பட்டியலின்படி, மயிலாப்பூர், கொளத்தூர், சேப்பாக்கம், வேளச்சேரி காஞ்சிபுரம், சிதம்பரம், பழனி, கோவை தெற்கு, ராசிபுரம், ஆத்தூர், திருவாரூர், திருவண்ணாமலை, இராசபாளையம், ஓசூர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கில்லியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், மயிலாடுதுறை, சூலூர், மதுரை வடக்கு, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை ஆகும். இதில், திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள கொளத்தூர் தொகுதியிலும், ஸ்டாலின் மகன் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ள சேப்பாக்கம் தொகுதியிலும் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பது பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்புவுக்கு பாஜக சார்பாக வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
