புல் பூண்டு முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என திமுக மற்றும் தோழமை கட்சிகள் பேசுகிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரையை மலரச் செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை மேகதாது அணை கட்ட ஒரு சதவீதம் கூட பாஜக அனுமதிக்காது. அணை சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதற்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, காவிரியில் அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றார். 

தமிழகத்தில் தாமரை மலருமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பதற்றம் நிலவுகிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக தாமரை மலந்தே தீரும். குளத்திலும், களத்திலும் தாமரை மலரும், அதில் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் வேண்டாம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

தாமரை மலருமா? மலராதா? என்பது குறித்து தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் கவலைப்பட தேவையில்லை. புல் பூண்டு முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என பேசுகிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது தாமரையை மலரச் செய்வோம். வைகோ, திருமாவளவன் ஆகியோரால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி வரப்போகிறது. அதனால் ஸ்டாலின் முதலில் அதை பார்க்கட்டும் என்று கூறினார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.