Asianet News TamilAsianet News Tamil

இயலாமையில் தவிக்கும் பாஜக.. இப்போதாவது அனுமதி கொடுங்கள் முதல்வரே.. கெஞ்சி கூத்தாடும் நிலை.

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது என்றும், இப்போது அனுமதி வழங்கினால் கூட குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடத் தயாராக  இருக்கிறோம் என தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். 

BJP suffering from disability .. Give permission now CM sir .. Bjp Demanding.
Author
Chennai, First Published Sep 8, 2021, 1:32 PM IST

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது என்றும், இப்போது அனுமதி வழங்கினால் கூட குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடத் தயாராக  இருக்கிறோம் என தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக மதச்சார்பற்ற கட்சி என்கிறது ஆனால் அதன் செயல்பாடுகள் அனைத்தும் மதத்தைச் சார்ந்தே இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கும், பின்னர் அதை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. மாறாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வழிபடுவதுடன், அதை கூட்டம் இன்றி தனி ஒருவராக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

BJP suffering from disability .. Give permission now CM sir .. Bjp Demanding.

பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை தலைமைச் செயலக முகவரிக்கும், சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன், விநாயகர் விவகாரத்தில் அரசியல் செய்வது பாஜக அல்ல, தமிழக அரசு தான் என்றார். முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டுமென மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டதன் அடிப்படையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிவருகிறோம் என்றார்.  

BJP suffering from disability .. Give permission now CM sir .. Bjp Demanding.

திமுகவில் ஏறத்தாழ 87% இந்து மக்கள் இருப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார், ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது. கொரோனா என்பது குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில்தான் பரவும், ஆனால் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் இது முழுக்க முழுக்க இந்து மக்களுக்கு எதிரான முடிவே அல்லாமல் வேறென்ன.? அனைத்து மக்களுக்குமான முதல்வர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இந்து பண்டிகைகளுக்கு அவர் இதுவரை ஒருமுறைகூட வாழ்த்து தெரிவித்ததில்லை. மதசார்பற்ற கட்சியாக திமுக இருக்கிறது என கூறுகின்றனர், ஆனால் மதத்தைச் சார்ந்த அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது என அவர் திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், இன்னும் காலம் கடந்துவிடவில்லை இப்போது அனுமதி வழங்கினால் கூட குறைந்த அளிவில் சிலைகளை வைத்து வழபட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

BJP suffering from disability .. Give permission now CM sir .. Bjp Demanding.

திமுக தடையை நீக்கவில்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும் என்றும், எப்படியும் சட்டபோராட்டம் நடத்தி விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தியே தீருவோம் என்றும்,  தடைகளை மீறி ஊர்வம் நடக்கும், முடிந்தாலு தடுத்துக் கொள்ளுங்கள் எனவும் பாஜக , இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கூறி வந்த நிலையில், விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடுக்கப்ட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அரசு விதித்த தடையில் தலையிட முடியாது என்றும், மத உரிமையைவிட வாழ்வாதார உரிமையே முக்கியம் என நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதானல்  சட்டம் போராட்டம் என்ற நிலையில கேள்விக்குறியாகி உள்ளது. எனவே விநாயகர் ஊர்வலத்தை நடத்த வேறு வழி இன்றி பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் இப்போதாவது அரசு அனுமதி வழங்கினால் குறைந்த அளவில் சிலைகளை வைத்து வழிபட தயாராக இருக்கிறோம் என பாஜக தன் நிலையில் இருந்து இறங்கி வந்திருப்பதை காணமுடிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios