Asianet News TamilAsianet News Tamil

#Biharelection2020:மெகா கூட்டணியின் கழுத்தை நெறிக்கும் பாஜக: வாழ்வா சாவா போராட்டத்தில் பீகார் வாக்கு எண்ணிக்கை

ஆர்.ஜே.டி 114 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் நிதீஷ்குமார் தலைமையிலான  ஜே.டி.யூ வெறும் மூன்று தொகுதிகள் மட்டுமே பின்தங்கி 111  இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆகவே இரு கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டியாக நிலவி வருகிறது. 

BJP strangles mega alliance, Bihar vote count in life and death struggle.
Author
Chennai, First Published Nov 10, 2020, 10:13 AM IST

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த ஜேடியு கூட்டணி, மெகா கூட்டணியும் சம்பலத்தில் உள்ளதால் இரு கூட்டணிகளுக்கும்  இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.  

ஆர்.ஜே.டி 114 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் நிதீஷ்குமார் தலைமையிலான  ஜே.டி.யூ வெறும் நான்கு தொகுதிகள் மட்டுமே பின்தங்கி 111 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆகவே இரு கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டியாக நிலவி வருகிறது. தேஜஷ்வி தலைமையிலான மெகா கூட்டணிக்கு மிக நெருக்கத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி சம்பலத்துடன் தொகுதிகளை கைப்பற்றி நெருக்கடி கொடுத்து வருகிறது. 

BJP strangles mega alliance, Bihar vote count in life and death struggle.

பிகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு  எண்ண தொடங்கப்பட்டன. பிகாரில் 55 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் (பாஜக-ஐக்கிய ஜனதா தளம்) vs (காங்கிரஸ்-ஆர்ஜேடி) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது பிகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன, இதில் 122 தொகுதிகளை வெல்லும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியைக் கைப்பற்றும். காலை முதல் விருவிருப்பாக வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆர்.ஜே.டி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி 114 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. 

BJP strangles mega alliance, Bihar vote count in life and death struggle.

அதே நேரத்தில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 111 இடங்களை கைப்பற்றி  பலத்தை சமன் செய்ய போராடி வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது பின்தங்கியிருந்த ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி மெல்ல மெல்ல வேகம் எடுத்து தற்போது மெகா கூட்டணியுடன் சம்பலத்தை பெற போராடி வருகிறது.  மொத்தம் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் யார் முன்னிலை பெற்று தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் இரண்டு கூட்டணிகளுமே சம பலத்தில் தொகுதிகளை கைப்பற்றி வருவதே அதற்கு காரணம். இன்னும் சில மணி நேரங்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் உறுதியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் தனியாக காங்கிரஸ்  வெறும் 31 இடங்களை பெற்றுள்ள நிலைநில் பாஜக 60 தொகுதிகளை கைப்பற்றி தனக்குள்ள செல்வாக்கை நிரூபித்துள்ளது குறிப்பிடதக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios