Asianet News TamilAsianet News Tamil

சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை விமர்சனம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ரகுபதி மீது வழக்கு உள்ளது. சிறையில் இருக்க வேண்டிய நபர், சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

bjp state president annamalai criticize state minister ragupathi in pudukkottai district
Author
First Published Aug 3, 2023, 4:15 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28ம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். ஏழாவது நாளாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் ஆலங்குடியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அரிமளம் விளக்கு சாலையில் இருந்து நடை பயணமாக வந்த அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்து வந்தனர். அவருக்கு கும்ப மரியாதை அளித்த தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அங்கிருந்து நடைபயணமாக வந்த அண்ணாமலை சந்தைப்பேட்டை, வடகாடுமுக்கம், அரசமரம், காமராஜர் சிலை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்று இறுதியில் காமராஜர் சிலை அருகே பேசினார். அப்போது அவர் கூறுகையில், கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் முகவரியாக உள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

15,000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ரகுபதி மீது வழக்கு உள்ளது. சிறையில் இருக்க வேண்டியவர் தற்போது சிறைச்சாலை துறைக்கு அமைச்சராக உள்ளது வேதனை அளிக்கிறது. சுற்று சூழல் பாதுகாப்பில் நாம் 21வது இடத்தில் உள்ளோம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞருடன் நிர்வாண உரையாடல்; இளம் பெண் கதறல் - போலீஸ் வலைவீச்சு

இந்த இரண்டு அமைச்சர்களும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. அங்கு 60 ஆயிரம் தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். 120 கோடி மதிப்பீட்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தை பிரதமர் மோடி கட்டி கொடுத்துள்ளார். இலங்கை ஈழ பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். புதுக்கோட்டை எம்பி தொகுதியை மீண்டும் கொண்டுவர கடிதம் எழுதி உள்ளோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளது சீக்கிரம் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அண்ணாமலை பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios