உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவரும் அமைச்சருமான தேவ்சிங், பொது மக்களை சந்திக்க சென்ற இடத்தில் தனது கைவிரலுடன் சேர்த்து மோதிரத்தையும் இழந்துள்ளார்.

உத்திரபிரதேச மாநில பாஜக தலைவர்  ஸ்வந்தந்தரா தேவ் சிங் மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்து வருகிறார் நேற்று மாலை முசாபர் நகரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள தனது காரில் சென்று இருந்தார். அவரைப் பார்த்தவுடன், மாலைகளுடன் வரவேற்க காத்திருந்த  கூட்டம் அவர் மீது முண்டியடித்த வந்தது. 

அவர் காரில் இருந்து இறங்குவதற்குள் கூட்டம் அவரை நெருங்கியதால் எதிர்பாராதவிதமாக அவரது வலது கை சுண்டு விரல் காரின் கதவை சிக்கிக் கொண்டது  அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்  கூட்டம் விலகவில்லை,  துரதிஷ்டவசமாக கார் கதவில் சிக்கி அவரின் சுண்டுவிரல் ஒரு கட்டத்தில் துண்டானது.

அவர் வலியால் துடிப்பதை கண்ட அவரது தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து  அவரை மீட்டனர்.

 வலியால் கத்தி கதறிய அவர் , துண்டான  விரல் தேடினார், அங்கிருந்து விரல் மாயமாகியிருந்தது, அதனால் அதிர்ச்சியடைந்த அவர் நீண்ட நேரம் தேடிய பின்னர் விரல் கிடைத்தது , ஆனால் அதிலிருந்த மோதிரம் மட்டும்  திருடப்பட்டு இருந்தது. விரல் மட்டும் கிடைத்தால் போதும் என்று அருகில் இருந்த மருத்துவமனைக்கு  விரைந்தார் தேவ் சிங், மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் எப்படியாவது துண்டான விரலை மீண்டும் பொறுத்திதருமாறு  மருத்துவரிடம் மன்றாடினார் ,சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தும் துண்டான விரலை பொறுத்த முடியவில்லை, 

தன் வலது கையின் ஐந்து விரலில் ஒரு விரலை அமைச்சர் இழுந்திருக்கிறார். அவரின் துண்டான விரலிலிருந்த மோதிரத்தை திருடியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.