கீழடியை தொல்பொருள் அருட்காட்சியமாக அறிக்காதது தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த பட்ஜெட்டில். இந்த பட்ஜெட்டில் தமிழகர்களின் நாகரீகத்தையும், பண்பாட்டைய தமிழ்மொழியின்தொன்மையும் சொன்ன கீழடியில் அருங்காட்சியகம் அமைக்காதது தமிழ்மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.   இந்த கோபம் தமிழக அரசு பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கீழடியில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்காதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.


உலகத்திலேயே மூத்த குடி தமிழ்குடி என்பதற்கான அனைத்துவிதமான ஆதராரமும் கீழடியில் கிடைத்திருக்கிறது. கீழடி தமிழர்களுக்கு கிடைத்த பொக்கி~ம் .இதையெல்லாம் மாற்றிய மைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்தது. மத்திய அரசுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்து கீழடியில் நம் முன்னோர்கள் சிவனையோ பெருமாளையோ வழிபட்டதற்கான அடையாளங்களும் அதற்கான சிலைகளையோ காட்ட முயற்சி செய்து வந்தது. இது எதுமே கீழடியில் நடக்கவில்லை. பாஜக வின் பாட்~h கீழடியில் பலிக்காமல் போனதற்கு தமிழ் தேசிய அமைப்புகள் தமிழ்வரலாற்று அமைப்புகள் அறிஞர்கள் எல்லாம் தினந்தோறு அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்துகொண்டே இருந்தார்கள். இதனாலேயே மத்திய அரசு மூன்றாவது கட்ட ஆய்வுக்கு அனுமதி அளிக்காமலும் அதற்கான நிதியை ஒதுக்காமலும் ஒதுங்கிக்கொண்டது. தமிழகத்தை பொறுது;தவரைக்கும் அப்படியே நிறுத்தினால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாகி விடும் என்பதால் தமிழக அரசு நிதிஒதுக்கி அகழர்ய்வு பணியை தொடங்கியது.  
தமிழர்களின் தொன்மையை இருட்டடிப்பு செய்கிறது பாஜக என்றெல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்  குற்றம் சாட்டி வருகிறார். மதுரை தமிழச்சி என்று புகழாரம் சூட்டப்படும் நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் கீழடியை மறந்து விட்டார்.


மதுரை தமிழச்சி இரண்டாவது முறையாக இந்திய பட்ஜெட்டை அறிவித்திருத்திருக்கிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான நிதிநிலையை அறிவித்திருக்கிறார் நிர்மலா. மதுரையின் வைகை நதி நாகரீகம் பழைய மதுரை இருந்த இடம் கீழடியாக இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் 2300 ஆண்டுகளுக்கு முன்பே கீழடியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தமிழ் பிராமி எழுத்துக்கள் வாணிகம் தொழிற்சாலைகள் வீடுகள் மண் பானைகள் பாசி மணி தங்கம் இரும்பு என பல்வேறு உலோகங்கள் இங்கே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தமிழ் மொழி உலகிலேயே முதன்மையான மொழி என்பதற்கான எச்சம் அடையாளம் ஆவணம் எல்லாம் கீழடியில் இருந்து கிடைத்திருக்கிறது. கீழடி அகழாய்வு தற்போது அரசியலாக்கபட்டலாம் தமிழர்களின் வரலாறு வெளியே வந்திந்திருக்கிறது. கீழடி எங்கள் தாய்மடி இந்த வார்த்தை தமிழர்களின் ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. குஜராத்தில் இதுவரைக்கு தொல்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டதில் என்ன வரலாறு கிடைத்திருக்கிறது. எதுவும் இல்லாத குஜராத்தில் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. தமிழகத்தில் அதுவும் கீழடியை பாஜக அரசாங்கம் திட்டமிடடே தமிழர்களின் வரலாற்றை மறைத்து வருகிறது.


சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நதி  என்று ஊடே சொருகியிருக்கிறார்கள். பாஜக நோக்கம் தொல்பொருள் ஆய்வு கண்டுபிப்பு என்பது கடவுள் இருந்ததாக இந்து மதம் அங்கே இருந்ததாக அடையாளப்படுத்த வேண்டும் .அதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாலி மனித எலும்பு கூடுகள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள். சிந்து சமவெளி சரஸ்வதி நதி என்று ஆக்கியவர்கள் ஆதிச்சநல்லுர் ஆய்வில்  சிவன் இருந்தாகச் சொல்லக்கூட தயங்க மாட்டார்கள்.பாஜக விற்கு  இந்து மதத்தை புகுத்த வேண்டும் அதற்காக பாஜக  வரலாற்றை கூட மாற்றி அமைக்கும் என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.

T Balamurugan