தமிழக்தில் பாஜக அசுரத்தனமான வளர்ச்சி.. அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்துங்க.. ஆர்.கே சுரேஷ்.
அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பாஜக அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், சினிமா தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே சுரேஷ் கூறியுள்ளார்.
அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பாஜக அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், சினிமா தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே சுரேஷ் கூறியுள்ளார். எனவே பாஜக தேசியத் தலைமை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது பாஜகவை வலுவாக காலூன்ற வைக்க வேண்டுமென பகீரத முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவாறு தேர்தல்களை சந்தித்து வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கென தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக அக்கட்சி நியமித்துள்ளது. அவரின் வருகைக்குப் பின்னர் தமிழகத்தில் பாஜக செயலளவில் வேகம் எடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்: செருப்பரசியலும் வெறுப்பரசியலும் இங்கு செய்தீங்க அரசியல் அனாதையாயிடுவீங்க.. பாஜகவை வச்சு செய்யும் முரசொலி.!
அண்ணாமலை ஆளும் கட்சியான திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், அவரை சமாளிப்பது திமுகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது, எதிர்க் கட்சியாக அதிமுக இருந்தாலும் மக்கள் மத்தியில் பாஜகவே எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜக ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வரும் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ், பாஜக குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்...! தொண்டர்கள் இதை செய்ய வேண்டாம்.. சசிகலா திடீர் உத்தரவு
நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், ராமநாதபுரத்தில் அண்ணாமலை தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்கே சுரேஷ், தனியார் ஊடகம் ஒன்றின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள ஒரு சில தகவல்கள் பின்வருமாறு:- நடிப்பிலும், அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணித்து வருகிறேன், தற்போது பிஸியாக இருக்கிறேன், வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்றால் சவால்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு பாஜகவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தேன், பாஜகவில் நல்ல பொறுப்பு வழங்குவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அது என்ன பதவி என்பது விரைவில் தெரியவரும், தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்றது முதல் பாஜகவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்து வருகிறது. பாஜக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலைக்கு தென்மாவட்டங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவரை தமிழக முதல்வர் வேட்பாளராக பஜக அறிவித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு ஆர்.கே சுரேஷ் கூறியுள்ளார்.