Asianet News TamilAsianet News Tamil

பெரியாரை அவமானப்படுத்தி எம்.ஜி.ஆரை போற்றி... பாஜகவின் சர்ச்சை ட்வீட்..!

தந்தை பெரியார், எம்.ஜி.ஆரின் நினைவுதினமான இன்று தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 
 

BJP's controversy tweeted, insulting Periyar
Author
Tamil Nadu, First Published Dec 24, 2019, 12:26 PM IST

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ‘’இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு தினமான இன்று அவரது ஈகை குணத்தை போற்றி பரப்புவோம்’’ என வாழ்த்து தெரிவித்துள்ளது. 

 

அதேவேளை பெரியாரின் நினைவு தினம் குறித்த தமிழக பாஜக போட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதிகொள்வோம்’’எனப் பதிவிட்டுள்ளனர். இந்தப்பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. தமிழக பாஜக இந்தப்பதிவை நீக்க வேண்டும் என ஆவேசமடைந்து வருகின்றனர்.

 

விதவை மறுமணம் என்பது சமுதாயத் தளத்தில் அவர் நடத்திய முதல் புரட்சி. அதை தனது சொந்த குடும்பத்திலேயே தனது 30வது வயதிலேயே தன் தங்கையின் மகளுக்கு நடத்தி வைத்தவர் பெரியார்’’என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios