கொரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை பாஜக அரசு ஏற்படுத்தி வருவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல படங்களில் பாஜக அரசை விமர்சித்ததாலேயே நடிகர் விஜய் வீட்டில் வருமான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை செய்யக்கூடிய அளவிற்கு அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை என்று தெரிவித்தார்.

சீன நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொரோனா வைரஸை விட மோசமான விளைவுகளை உண்டாக்கி மக்களை வாடி வதைப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார். மேலும் தனது செருப்பை சிறுவனை கொண்டு கழட்ட வைத்தது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை விமர்சித்த பாலகிருஷ்ணன், தொடர்ந்து மதவெறி கருத்துக்களை பரப்பிவரும் அவர் அதிமுக அமைச்சரா? இல்லை ஆர்.எஸ்.எஸ் அமைச்சரா? என தெரியவில்லை என்றார். தொடர்ந்து தமிழக தேர்வு வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மட்டும் 700 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளிவந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!