Asianet News TamilAsianet News Tamil

மத்தியில் பாஜக ஆட்சி.. அதனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு போடுங்கள்.. லாஜிக்காக பேசிய எடப்பாடியார்.

முழுமையான திட்டங்கள் வந்துசேரவில்லை. சட்டமன்றம் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் பார்ப்பார்கள் மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். 

BJP rule in the middle .. so vote for Pon.Radhakrishnan .. Edappadiyar who spoke for logic.
Author
Chennai, First Published Mar 27, 2021, 11:40 AM IST

சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசியதாவது:  "எம்.ஜி.ஆர், அம்மாவை வணங்கி. நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வெற்றி வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி கழக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜான்தங்கம், விளவங்கோடு பா.ஜ.க வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோர்களுக்கும். இன்று அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றிபெற்றவர், அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறார். 

BJP rule in the middle .. so vote for Pon.Radhakrishnan .. Edappadiyar who spoke for logic.

தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அவர்களுக்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். மாவட்டம் எழுச்சிபெற ஏற்றம்பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்று தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற, எழுச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள். கடந்த சட்டமன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் பிரச்னைகள் எங்களிடம் கொண்டுவரவில்லை. இங்குள்ள திட்டம் நிறைநிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாக வெற்றிபெறவையுங்கள். மத்தியிலும் மாவட்டத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்சி நடக்கும். நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும். 

BJP rule in the middle .. so vote for Pon.Radhakrishnan .. Edappadiyar who spoke for logic.

முழுமையான திட்டங்கள் வந்துசேரவில்லை. சட்டமன்றம் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வருவதில்லை. அப்படி வந்தாலும் தொகுதியைத்தான் பார்ப்பார்கள் மாவட்டத்தை கவனிக்கமாட்டார்கள். எனவே பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் வளர்ச்சிபெறும், ஏனென்றால் மத்தியில் பா.ஜ.க ஆட்சி எனவே திட்டங்களை கொண்டுசெல்ல முடியும். தவறான , அவதூறான செய்தி பரப்புகிறார்கள். சரக்குப்பெட்டக துறைதுறைமுகம் வருவதாக அவதுறு செய்தியை தேர்தல் காரணமாக பரப்புகிறது. அதிமுக சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. மீண்டும் சொல்கிறேன் மக்கள் இதை நம்ப வேண்டாம். மீண்டும் சொல்கிறேன் தேர்தல் நேரத்தில் திமுக காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதைபரப்புகிறார்கள். சிறப்பு அதிகாரிகள் மூலம் ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. மக்களிடம் சூழ்ச்சி செய்கிறார்கள். ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள். எனவே மீனவர்களும் பொதுமக்களும் பொய் செய்தியை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios