கர்நாடக சட்டசபை தேர்தல்… 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 23 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 23 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் மே.10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: வெளியானது 189 பேர் கொண்ட முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல்!!
அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: நந்தினி Vs அமுல்.. பாஜக - காங்கிரஸ் மோதல் - குறுக்க இந்த குஜராத் மிளகாய் வந்தா.!
இதனிடையே நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் புதிதாக 52 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 23 வேட்பாளர்கள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.