தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது. அதில், ஹெச்.ராஜா, வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயித்து தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைப்பதே லட்சியம் என்று தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், திமுக இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று இரவு பகலாக தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை கொண்டுவர குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டப்ரேவையில் பாஜக எம்எல்ஏக்களை அமர வைக்க வேண்டும் எல்.முருகன் அதிரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால், பாஜக கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது. 

அந்த குழுவில், முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி தலைவர் நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறுபான்மையினர் அணியின் மாநில துணைத்தலைவர் ஷா மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.