“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !
அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் மத்திய அரசின் ரூ. 1, 000 கோடி பங்களிப்புடன் தொடங்கி 96 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வாழ்வுரிமை மாநாடு சேலத்தில் மூன்று நாள்களுக்கு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவா் கே. பி. ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ. நல்லசாமி, விவசாய அணி தலைவா் ஜி. கே. நாகராஜ், மாநில பொதுச் செயலாளா் ஏ. பி. முருகானந்தம், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கலந்துகொண்டு பேசும் போது, ‘பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை ரூ. 10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியதால் ‘நீரா’ போன்ற பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய அளவில் விவசாயம் சாா்ந்த ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
21 பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1, 310 ஆக இருந்தது. தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2, 040 வழங்கப்படுகிறது. சுமாா் 56 சதவீதம் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் கிரெடிட் காா்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனா்.
அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் மத்திய அரசின் ரூ. 1, 000 கோடி பங்களிப்புடன் தொடங்கி 96 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் 1. கி. மீ. தூரத்திற்கு குழாய்போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது. இந்தியாவில் விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதமா் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இதன் மூலம் குளிா்பதனக் கிடங்குகள் உருவாக்கப்படும். இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கி விட்டது. சிக்கிமில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உள்ளது. இந்திய அளவில் 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தில் ஆா்வம் செலுத்தவில்லை.
இயற்கை விவசாயத்தை இளைஞா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக பாஜக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம். பிஎஸ். என். எல். நிறுவனத்துக்காக ரூ. 1. 40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும். இது மகாத்மா காந்தியின் கனவு’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு மரணம்.. பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை !