முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்ல தயாராகும் பாஜக..! 10 நாட்களுக்குள் ஸ்டாலினை நேரில் சந்திக்க அண்ணாமலை திட்டம்

டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

BJP President Annamalai is going to meet Chief Minister Stalin and give a report on the reduction of Tasmac shops

தமிழகத்தில் அதிகரித்த மது விற்பனை

திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே தோடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசின் செயல்பாடுகளை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரும் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டதுள்ளது, இந்தநிலையில் தமிழகத்தில் கள்ள சாராயாம் சாப்பிட்டு 22பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக திமுக அரசின் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டை விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மது போதைக்கு தமிழகத்தில் 9% மக்கள் அடிமையாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மது இல்லாத இந்தியா என்பது சாத்தியமே இல்லை, ஏனென்றால் இது ஜனநாயக நாடு ஆகவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். 

BJP President Annamalai is going to meet Chief Minister Stalin and give a report on the reduction of Tasmac shops

ஸ்டாலினை சந்திக்கும் அண்ணாமலை

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான உள்ள டாஸ்மாக் கடைகளை  ஆயிரத்திற்கும்  கீழாக கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  2020 ல் மதுபானத்திற்கு அடிமையானவன் எண்ணிக்கை 5% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடைய பாதிப்பு சமூக பாதிப்பாக மாறிவிடும். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மதுபான கடையின் மூலம் வருமானம் என்பது 22 விழுக்காடு உயர்ந்துள்ளது. டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும்,

அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளோம். 44000 கோடி அரசுக்கு நஷ்டம் இல்லாமல் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் நிச்சயம் இடம் பெறும் என தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சி இல்லாத ஒரு கட்சி வெள்ளை அறிக்கையை  கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டார். 

இதையும் படியுங்கள்

9 தோல்வி எடப்பாடி..சேலத்தில் மாநாடு.! கொங்கு மண்டலத்தில் சீக்ரெட் மீட்டிங் - ஓபிஎஸ் Vs இபிஎஸ் மோதல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios