அடுத்த ஆண்டு ரஜினி கட்சி துவங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் அதிமுக – திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். ஆனால் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த கூட்டணியை உருவாக்க பாஜகவில் மிக முக்கிய பிரமுகர்கள் சிலர் ரஜினிக்கு மறைமுகமாக உதவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக மக்களிடம் நல்ல இமேஜ் கொண்ட தலைவர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது தான் ரஜினியின் எண்ணம். அந்த வகையில் கமல் மற்றும் விஜயகாந்த்தான் ரஜினியின் முக்கிய சாய்ஸ் என்கிறார்கள்.

விஜயகாந்த் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி வரும் நிலையில் அவரை கூட்டணிக்குள் கொண்டு வருவது தான் சிரமமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் பாஜக சொல்வதை பிரேமலதா தட்டமாட்டார் என்பதால் ரஜினி கூட்டணிக்கு தேமுதிக எளிதாக வந்துவிடும் என்கிறார்கள். கமலை பொறுத்தவரை இனி தனித்து போட்டியில்லை என்கிற முடிவில் உள்ளார். எனவே புதிய அணி என்கிற பெயரில் ரஜினி – விஜயகாந்த் கூட்டணியில் அவர் இணைவதில் சிக்கல் இருக்காது என்று சொல்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருந்தாலும் இந்த மூன்று பேரையும் முதலில் ஒன்று சேர்க்கவும் பிறகு பாமக போன்ற கட்சிகளை உள்ளே கொண்டுவரவும் முயற்சிகள் நடைபெறும் என்கிறார்கள். தமிழருவி மணியன், ஆடிட்டர் ஒருவர் இந்த முயற்சியல் வெளிப்படையாக ஈடுபடுபவதாக சொல்கிறார்கள். மேலும் பாஜக இந்த முறை அதிமுக – திமுகவை ஒழித்தால் போதும், ரஜினி வெல்லட்டும் என்கிற வியூகத்தில் இந்த கூட்டணிக்கு ஒத்துழைப்பதாக சொல்கிறார்கள்.

இதே போல் இந்த கூட்டணிக்கு ஆதரவாக திமுக – அதிமுக அணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையும் பாஜக மேற்கொள்ளும் என்றும் பீதி கிளப்புகிறார்கள். ரூ.25 கோடி விவகாரம் வெளியானதும் கூட திமுக கூட்டணியை கலங்கப்படுத்த தான் என்கிறார்கள். இதே போல் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக தாமதப்படுத்தியதும் கூட அடுத்த தேர்தலுக்கான வியூகம் தான் என்று சொல்கிறார்கள்.